தமிழக அகதிகள் முகாமிலிருந்து தப்பிச் சென்ற 20 சிறுவர்கள் உட்பட 89 இலங்கைத் தமிழர்கள் 2021 ஒக்ரோபர் மூன்றாம் திகதி முதல் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதி செய்துள்ளது என ஆசிய – பசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு தெரிவித்துள்ளது. நடுக்கடலில் காப்பாற்றப்பட்ட இவர்கள் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என பிரிட்டன் உறுதி செய்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அகதிகள் முகாமிலிருந்து வெளியேறி படகு மூலம் பயணித்துக் கொண்டிருந்தவேளை நடுக்கடலில் அவர்களது படகு பழுதடைந்துள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படை முகாமில் உள்ளவர்களிடம் படிவம் ஒன்றை வழங்கி அதனை பூர்த்திசெய்யுமாறு கேட்டுள்ளனர் என அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக ஆசிய-பசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு தெரிவித்துள்ளது. அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து அவர்களின் அடைக்கல கோரிக்கைகளை ஆராய்வார்களா? எதற்காக அந்த ஆவணத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என அகதிகளிடம் தெரிவித்துள்ளார்களா? அவர்கள் சட்ட ஆலோசனை பெறுவதற்கு பிரிட்டன் அனுமதிக்குமா? ஐ.நா அவர்களை தொடர்புகொள்ள அனுமதிக்குமா? எனவும் ஆசியபசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.