$ 8பில்லியன் திரட்டுவதற்கு நாட்டிலுள்ள சொத்துக்கள் குத்தகைக்கு!

நாட்டிலுள்ள பெறுமதிமிக்க சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலரை உடனடியாக திரட்டுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மாத்தள விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவை அடங்கும். இவை நீண்ட கால குத்தகைக்கு விடப்படும். கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மாத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு துறைமுகத்தின் தெற்குப்பகுதி 600 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளதுடன் கொழும்பு துறைமுக நகரத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான பங்கு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது.

மேலும், ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் அரசுக்கு சொந்தமான தொகுதி 500 மில்லியன் டொலருக்கும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அரச பங்குகள் 300 மில்லியன் டொலருக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

source from wionnews
Spread the love