இலங்கையில் பயன்படுத்தப்படும் சிகரெட்டுகளில் 21 வீதமானவை சட்டவிரோதமானவை என ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 56 வீதமான மக்கள், கொரோனாத் தொற்றுப் பரவுவதற்கு முன்னரே சட்டவிரோதப் புகையிலைப் பொருள்களைப் உட்கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றது.
சட்டவிரோதப்புகையிலை பயன்பாடு நீண்டகால சவாலாக உள்ளது. கொள்கை வகுப்பாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். தேசிய சுகாதார இலக்குகளை அடைவதற்கும், வருவாயை அதிகரிப்பதற்கும் மற்றும் சட்டவிரோதப் புகையிலை சந்தையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் பரந்த நடைமுறையான புகையிலைக் கொள்கையைப் பின்பற்றுகிறது. இதற்கு ஆராய்ச்சி நுண்ணறிவுப் பிரிவின் இணக்கம் அவசியம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.