பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கை மக்களுக்கு நன்கொடை அளிக்க தமிழக மக்களும் முன்வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்திலிருந்து பொருள்களை அனுப்புவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பப்படும். இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் தொன் அரிசி, 500 தொன் பால் மா மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பப்படும். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ நினைக்கும் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்கமுடியும். மக்களால் வழங்கப்படும் உதவிகள், இலங்கை மக்களுக்குப் பொருள்களாக அனுப்பப்படும் என்றுள்ளது.