இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி திடீரென ஏற்பட்டதல்ல என பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் விம்பிள்டனின் பிரபு தாரிக் அஹ்மட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றின் பிரபுக்கள் சபையில் நடைபெற்ற விவாதத்தின் போது இதனைத் தெரிவித்த அவர், இலங்கையின் பொருளாதார நிலைமையை மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உட்பட இலங்கையின் பொருளாதார நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடனை தாங்க முடியாதது என மதிப்பிட்டுள்ளது. ஆனாலும், கடனை நிலையான பாதையில் கொண்டு செல்ல தேவையான சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடனான ஆழமான விவாதங்களை நாங்கள் வரவேற்கிறோம்.
இவ்வாறான நிலையில், பிரித்தானியாவும் பாரியளவிலான நன்கொடையை வழங்கும். இந்தோ – பசிபிக் பகுதியில் சீனாவின் பரந்த பிரச்சினையில், எமது முக்கிய பங்காளிகளுடன் ஆக்கபூர்வமாக செயற்படவேண்டும்” என்றார். தனது இலங்கை விஜயத்தின் போது கூறியது போல், உட்கட்டமைப்பு மேம்பாடு என்று வரும்போது,முக்கிய பங்காளிகளுடன் எங்களுடைய சொந்த முயற்சிகள் மூலம், ஒரு நாடு கடனாளியாகாமல், அதன் கடனைச் செலுத்த அனுமதிக்கும் மாற்று வழியை வழங்க வேண்டும் என அவர் வலியுத்தியுள்ளார்.