இஸ்ரேல் படையினர், பாலஸ்தீனர்கள் இடையே மோதல்- 71 பேர் காயம்

இஸ்ரேல் படையினர் – பாலஸ்தீன மக்களிடையே ஜேருசலேமில் நேற்று முன்தினம் மோதல் வெடித்தது இஸ்ரேல் படைகள் மீது கற்கள் வீசி பாலஸ்தீன மக்கள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இஸ்ரேலியப் படைகள் கூட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் றப்பர் தோட்டாக்களை வீசியதுடன் சரமாரித்தாக்குதல் நடத்தினர். இந்த மோதலின் 71 பேர் காயமடைந்தனர்.


இஸ்ரேலியப் படையினருடன் ஏப்ரல் 22 அன்று ஜேருசலேமின் மிக முக்கியமான அல் அக்ஸா மசூதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலியப்படைகளின் தாக்குதலில் காயமடைந்த வலீத் ஷரீப்பின் என்ற இளைஞன் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் பங்கேற்றனர்.

இந்த இறுதி ஊர்வலத்தில் பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேல் படைகள் மீது கற்கள் உள்ளிட்டவற்றை கொண்டு தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதால் இரு தரப்புக்கும் இடையே பெரும் வன்முறை வெடித்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love