இந்த ஆண்டு (2022) தொடக்கத்தில் இருந்து மே 12ம் திகதி வரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டுமார்ச் மாத தொடக்கத்தில் இருந்து செலாவணி விகிதம் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட நேர மின்வெட்டும் தொடர்கின்றது. மருந்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவ துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது 30 வீதம் அதிகமாக உணவுக்காக மக்கள் செலுத்த நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே, இந்த ஆண்டு (2022) தொடக்கத்தில் இருந்து மே 12ம் திகதி வரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.