இலங்கைக்கு கடன் சலுகை வழங்க முன்வந்துள்ள G7 நாடுகள்

இலங்கைக்கு கடன் சலுகையை வழங்க எதிர்பார்ப்பதாக G7 நாடுகளின் நிதித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

G7 குழுவின் உறுப்பினர்கள் இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவை இதற்கு முன்னர் சமர்ப்பித்திருந்தனர். இலங்கைக்கான நீண்டகால தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக G7 நாடுகள் கூறியுள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்கு ஒப்பீட்டளவிலான நிபந்தனைகளின் கீழ் பணியாற்றுமாறு G7 நிதித்தலைவர்கள் ஏனைய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் Reuters தெரிவித்துள்ளது.

Spread the love