நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்படாத நிலையில், மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது வழங்கும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியாவில் கொரோனா பாதிப்பை அடுத்து ஓமிக்ரான் பரவலும் அதிகரித்துள்ளது.
இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை மத்திய அரசு மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை. பிப்ரவரி மாதத்தில் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக மூன்றாவது அலை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பு ஊசிகள் எப்போது வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்