28 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சத்திர சிகிச்சை உபகரணங்களை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.
இம் மாதம் இரு சந்தர்ப்பங்களில் இவை கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜோர்தான் மற்றும் மலேசியாவில் செயற்படும் அமைப்பொன்றும் இலங்கைக்கு மருந்துகளை நன்கொடையாக வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பங்களாதேஷ் அரசாங்கத்தினால் 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.