இறக்குமதி பொருட்களுக்கு இரு மடங்கால் வரி அதிகரிப்பு

பழங்கள் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றுக்கான விசேட பண்ட வரிகள் இரண்டு மடங்கால் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க வர்த்தக பண்ட வரிச்சட்டத்திற்கமைய குறிப்பிட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் யோகட் உள்ளிட்ட பால் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான விசேட வரி 1000 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தோடம்பழம், அப்பிள் மற்றும் திராட்சை உள்ளிட்ட பழங்களுக்கு கிலோ ஒன்றுக்கான விசேட வரி 300 ரூபாவில் இருந்து 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கு அமைய நாட்டின் சந்தைகளில் குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளது. குறிப்பாக தற்போது அப்பிள் ஒன்று நூறு ரூபா முதல் 150 ரூபா வரையான விலைக்கு விற்பனையாகும் நிலையில் இனி இதன் விலை 200 ரூபா முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படலாம்.

Spread the love