அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு அதி சிறந்த வீரர்களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் இருபது 20 கிரிக்கெட் திறமையாக பந்து வீசிய வனிந்து ஹசரங்க டி சில்வா (26 விக்கெட்கள்), மஹீஷ் தீக்ஷன (12), துஷ்மன்த சமீர (9), துடுப்பாட்டத்தில் பிரகாசித்த பானுக்க ராஜபக்ஷ (206 ஓட்டங்கள்) ஆகியோர் இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். அத்துடன் லிட்ல் மாலிங்க என அழைக்கப்படும் மதீஷ பத்திரனவும் குழாத்தில் இடம் பெறுகிறார்.
இருபது 20 அணிக்கு வழமைபோல் தசுன் ஷானக்க அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சகலதுறை வீரர்கள் பலர் இடம்பெறுகின்றனர். இருபது 20 கிரிக்கெட் குழாம் தசுன் ஷானக்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, நுவனிது பெர்னாண்டோ, லஹிரு மதுஷன்க, வனிந்து ஹசரங்க, சமில கருணாரட்ன, துஷ்மன் சமீர, கசுன் ராஜித்த, நுவன் துஷார, மதீஷ பத்திரன, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, ப்ரவீன் ஜயவிக்ரம, லக்ஷான் சந்தகேன். தயார்நிலை வீரர்கள்: ஜெவ்றி வெண்டர்சே, நிரோஷன் திக் வெல்ல.