எரிபொருள், எரிவாயு பிரச்சினை நீடிக்கும் நிலையில் அரசாங்கம் நேற்றுமுன்தினம் (01) விதித்த வரி காரணமாக பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இறக்குமதி பொருட்கள் மீதான வழமையான தீர்வை வரிக்கு மேலதிகமாக 100 வீத மிகை வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு நேற்று நடவடிக்கை எடுத்தது. அத்துடன், 4 வீதத்தால் VAT அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு கையடக்க தொலைபேசிகளின் விலையில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியொன்றின் விலை தற்போது 80,000 ரூபாவை விடவும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். உணவு, மருந்தைப் போன்றே COVID காலப்பகுதியிலிருந்து தொலைத்தொடர்பு உபகரணங்களும் நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம்பிடித்துள்ளன.
தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கு மேலதிகமாக அதனை பயன்படுத்தும்போது அறவிடும் தொலைத்தொடர்புகள் வரி 11.25 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.