இலங்கைக்கு மேலும் 120 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகவும் ஆதரவாகவும் 120 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்காகவும் மக்களிற்கு ஆதரவாகவும் கடந்த 70 வருடங்களாக அமெரிக்கா வெளிநாட்டு உதவி கடன்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தனியார் துறையினருக்கு சிறந்த செய்தி என மேலும் தெரிவித்துள்ள அவர் டிஎவ்சியின் 120 மில்லியன் அமெரிக்க டொலர் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை சென்றடையும், என குறிப்பிட்டுள்ளார்.