கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த மாதம் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உயர் தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 5ஆம் திகதிவரை இடம்பெற்றது. 2 லட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 66 ஆயிரத்து 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றியமை குறிப்பிடத்தக்கது.