ஜனாதிபதி பதவி விலகினால் நாட்டின் அடுத்த கட்ட நிலை என்ன!- சாலிய பீரிஸ்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர், புதிய அரச தலைவரை நியமிப்பது உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சங்கத்தின் தலைவர் அரச தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை வெளியிட்டுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், “அரச தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரச தலைவர் மற்றும் பிரதமர தமது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

Spread the love