இந்திய அரசாங்கத்தால் இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட யூரியா உரத் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த தினம் இந்நாட்டிற்கு வந்தடைந்த உரக் கப்பலில் இருந்து உரத்தை தரையிறக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவற்றை எதிர்வரும் 10 நாட்களுக்குள் விநியோகித்து நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அநத் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த உரத்தின் தரம் தொடர்பில் நேற்றைய தினம் விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் உரத் தொகை உரிய தரத்துடன் உள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
50 கிலோ கிராம் உர மூடை ஒன்று 10 ஆயிரம் ரூபாவுக்கு விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன லொகு ஹேவகே தெரிவித்தார்.