அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது “டெல்மிக்ரோன்”(Delmicron)என்ற புதிய கொரோனா மாறுபாடு உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, டெல்டா மற்றும் ஒமிக்ரோன் வகைகளின் ஒன்றாக கலந்த கலவையாக இந்த புதிய மாறுபாடு தோன்றியுள்ளது.
2020ம் ஆண்டில் இருந்து இரு வருடங்களாக உலகம் கொரோனா பிடியில் சிக்கிக்கொண்டு தற்போதுவரை மீள முடியாமல் தத்தளித்து வருகிறது. வரும் 2022-ம் ஆண்டாவது கொரோனா இல்லாத வாழ்க்கையை வாழ்வோமா என்று காத்திருந்த நிலையில், மீண்டும் கொரோனாவின் கொடிய வகையான “ஒமிக்ரோன்” உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியது. மேலும் இந்த மாறுபாடு மிக தீவிரமாக இருப்பதாகவும், தடுப்பூசிக்கு எதிராக இதன் வீரியம் குறையாது என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மேற்கத்தய நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது “டெல்மிக்ரான்” என்ற புதிய கொரோனா மாறுபாடு உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, டெல்டா மற்றும் ஒமிக்ரோன் வகைகளின் ஒன்றாக கலந்த கலவையாக இந்த புதிய மாறுபாடு தோன்றியுள்ளது. இது மேற்கண்ட இரு வகைகளை காட்டிலும் வேகமாக பரவும் திறனைக் கொண்டுள்ளது.