மேல் மாகாணத்தில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு,நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனம்

ஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறியுள்ள காரணத்தினால், அரசியலமைப்பின் 37/1ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்குரிய கடமைகளை பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுப்பார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படும் போது அவரால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும் என இன்று(13) பிற்பகல் 12.25 அளவில் பிரதமர் அலுவலகத்தினால் தௌிவுபடுத்தப்பட்டதாக ‘த ஹிந்து’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

Spread the love