அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், தேசிய வேலைத்திட்ட உருவாக்கத்துக்கு நாம் ஆதரவு வழங்குவதுடன், அதனை உருவாக்கிய பின்னர் – அதன் இறுதி வடிவத்தைப் பொறுத்தே தேசிய வேலைத் திட்டத்தில் அங்கம் வசிப்பதா? இல்லையா? என்பது குறித்து கூட்டமைப்பு தீர்மானிக்கும் எனவும் கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இச்சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் பங்கேற்றார். சுமார் ஒன்றரை மணி நேரமாக இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்கவில்லை. ஏனைய 08 பாராளுமன்ற உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இச்சந்திப்பின்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சார்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எடுத்துரைத்தார். தேசிய வேலைத்திட்ட உரு வாக்கத்துக்கு நாம் ஆதரவு வழங்குவதுடன், அதனை உரு வாக்கிய பின்னர் அதன் இறுதி வடிவத்தைப் பொறுத்தே தேசிய வேலைத்திட்டத்தில் அங்கம் வசிப்பதா? இல்லை யா? என்பது குறித்து கூட் டமைப்பு தீர்மானிக்கும் என சுமந்திரன் கூறினார்.
அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என – சுமந்திரன் குறிப்பிட்டார். – இதேவேளை, தமிழ் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியிடம் – இக்கூட்டத்தில் பங்கேற்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர்.
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமும் அரசியல் கைதிகளின் விபரங்களைக் கொடுத்து அவர்களை விடுதலை செய்யக் கோரியதாகவும் பாரளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், காணாமல் போனவர்கள் தொடர்பில் நட வடிக்கை எடுக்க வேண்டும். கடந்த உங்களது அரசாங்கத் தில் காணி சுவீகரிப்பை நிறுத் தியதுபோல் இப்போது உடன டியாக இவ்வாறான நடவடிக் கைகளை நிறுத்த வேண்டும் எனவும் கூட்டமைப்பினரால் கோரப்பட்டது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்தும் சந்தித்துப் பேசுவதென இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கியதுடன், காணி சுவீகரிப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு காணி சுவீகரிப்பு குறித்த விபரங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த அரசாங்கத்திலும் அங்கம் வகிக்காதென பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். தேவைக்கேற்ப வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு வழங்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்