வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் கொரியத் தூதுவர் சந்திப்பு

கொழும்பில் உள்ள கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 29ஆந் திகதி அமைச்சில்  மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

அரசியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் மக்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழமாக்குதல் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அமைச்சர் சப்ரி, கடந்த சில ஆண்டுகளில் இருதரப்பு ஈடுபாடுகளின் மட்டத்தில் திருப்தியை வெளிப்படுத்தியதுடன், இலங்கைக்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு பங்காளித்துவத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் வேகத்தை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவதற்கான கூட்டுப் பொருளாதாரக் குழுவை புதுப்பிக்க வேண்டிய அவசரத் தேவையை அமைச்சர் சுட்டிக் காட்டினார். இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு கொரியா சரியான நேரத்தில் பரிசீலித்து வருவதையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பாராட்டினார். இலங்கைக்கு கொரியா உதவிகளை வழங்குவதை தூதுவர் வூன்ஜின் உறுதியளித்தார்.

Spread the love