நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் ஆப்பிள்டன் , பிரதி உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ டிரவலர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, குறிப்பாக இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நியூசிலாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கோரிக்கையையும் விடுத்தார்.
குறிப்பாக, பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளின் மேம்பாட்டிற்காக பிரபலமான உலகின் முன்னணி நாடான நியூசிலாந்திலிருந்து வழங்க முடியுமான இயன்ற பங்களிப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால நட்புறவு குறித்தும் அவர் நினைவு கூர்ந்தார். இது தொடர்பாக சாதகமான பதிலை வழங்கிய நியூசிலாந்து தூதுவர்,இலங்கையை கட்டியெழுப்புவதற்காக தமது அரசாங்கத்தின் பூரண ஆதரவு கிட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.