பூமியில் இருந்து 37 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியை விட 4 மடங்கு நிறை கொண்ட பூமியின் ஒத்த தன்மைகளை கொண்ட கிரகமொன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில்: இந்த கிரகத்தின் ஒரு வருடம் 10.8 நாட்களாகும். இது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் அதேவேளை இக்கிரகம் சுற்று வட்டபாதையில் நேராகச் செல்லாமல் உள்ளேயும் வெளியேயும் மாறி மாறி செல்கின்றது. அதற்கு ராஸ் 508 பி எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த கிரகத்தின் மேற்பரப்பில் நீர் உருவாக்கத்திற்கு உகந்த வெப்பநிலை இருப்பதால், மற்ற கிரகங்கள் உடன் ஒப்பிடுகையில் இதில் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவித் துள்ளனர்.