சர்வதேச கிரிக்கெட் நடுவர் ரூடி வாகன விபத்தில் உயிரிழப்பு

‘சர்வதேச கிரிக்கெட் நடுவரான 73 வயதான ரூடி கோர்ட்சன் காலமானார். ரூடி கோர்ட்சன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனிலிருந்து தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது ரிவர்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் இவருடன் மேலும் ‘மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


குறித்த விபத்து தொடர்பில் அவரது ‘மகன் ரூடி கோர்ட்சன் ஜூனியர் தென்னாப்பிரிக்காவின் வானொலி செய்தி சேவை ஒன்றுக்கு தனது தந்தை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். தனது தந்தை அவரது நண்பர்கள் சிலருடன் ஒரு கோல்ஃப் போட்டிக்குச் சென்ற நிலையில், திங்கட்கிழமை திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தந்தை நண்பர்களுடன் மற்றொரு சுற்று கோல்ஃப் விளையாட முடிவு செய்ததாக தெரிகிறது என அவரது மகன் மேலும் தெரிவித்துள்ளார். ரூடி கோர்ட்சன் சர்வதேச கிரிக்கெட்டில் 331 போட்டிகளுக்கு நடுவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love