2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணம் அனுப்புதல் 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் மொத்தமாக 3,777.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். எனினும், இவ்வருடத் தின் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் 1,889.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை மாத்திரமே இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
மத்திய வங்கியின் தகவலுக்கமைய, வெளிநாட்டு பணியாளர்கள் இவ்வருடத்தின் ஜூலையில் 297.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜூனில் 274 மில்லியன் அமெரிக்க டொலரையும், அதற்கு முந்தைய மாதத்தில் 304 மில்லியன் அமெரிக்க டொலரையும் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.