மர அணிலை (தண்டுலேனா) தேசிய விலங்கு பட்டியலில் இருந்து நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய விலங்காக விளங்கும் மர அணிலை பல விவசாய அமைப்புகள் தேசிய விலங்கு பட்டியலில் இருந்து நீக்குமாறு பரிந்துரைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிஸ்லட் மர அணில் பயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இது தேசிய விலங்கு என்பதால் இதை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் அரசாங்கம் கவனமுடன் இருப்பதாகவும், கிரிஸ்லட் மர அணிலை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய பாரம்பரியங்கள் பற்றிய ஆலோசனைக் குழு உட்பட அனைத்து தரப்பினரிடம் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.