அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (22) உயர் நீதிமன்றில் ஆரம்பமாகியுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றது.
வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர, சட்டத்தரணி நுவன் பெல்லந்துடாவ, திஸ்ஸ பண்டார ரத்நாயக்க, எச்.டி.ஜே.குலதுங்க, பீ.பி.தஹநாயக்க உட்பட ஒன்பது பேரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.