இலங்கை மீது நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானம் 46/1 தொடர்பாக கடுமையானதும் உறுதியானதுமான முடிவிலேயே அரசாங்கம் தொடர்ந்தும் இருக்குமென அறியவருகிறது. கடந்த வருட அமர்வில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டிருந்த 46/1 தீர்மானத்தின் குற்றங்குறைகளில் முன்னேற்றத்தை, அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள 51 ஆவது அமர்வில் மீளாய்வு செய்ய ஐ. நா. மனித உரிமைகள் பேரவை திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடந்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த இரகசியக் குறிப்பொன்றை சமர்ப்பித்திருந்தார் 2021 மார்ச்சில் ஜெனீவாவில் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் உள்ளீர்த்துக் கொள்ளப்பட்ட எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உபாயங்களை உருவாக்குவதற்கும், வெளியில் இருந்து ஆதாரங்களை சேகரிப்பதற்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை தடையின்றி முழுமையாக முயற்சிப்பதை இலங்கை தொடர்ந்து நிராகரிக்கும் என்று உறுதிப்படுத்துமென்ற அக்குறிப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
அதேவேளை ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளிவிவகார, நீதி, நிதி, பாதுகாப்பு அமைச்சுக்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய உயர் அதிகாரம் கொண்ட உத்தியோகபூர்வ குழுவொன்றை உள்நாட்டு சட்ட கட்டமைப்பின் கீழ் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்முறைக்காக வெளிவிவகார அமைச்சர் தலைமையில் இலங்கை நிறுவுமென அமைச்சரவைக்கான தமது குறிப்பில் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டிருந்தார்.
செப்ரெம்பர் 12ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வின் போதும் அதன் பின்னரும் ஐ.நா சபையின் செயற்பாடுகளின் பிந்திய பகுப்பாய்வுக்காக இந்தக் குழு தொடர்ந்து கூடுமென அமைச்சர் சப்ரி தெரிவித்திருக்கிறார். இந்த சர்வதேச அமர்வில் இருந்து இலங்கைக்கு சாத்தியமான சிறந்த பெறுபேறுகளை கண்டறியும் நோக்கில் குழுவின் உயர்மட்ட உறுப்பினர்கள் 51 ஆவது அமர்விற்கு அப்பால் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் முக்கியஸ்தர்களை உத்தியோகப்பற்றற்ற முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இது இவ்வாறிருக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி அலுவலகத்திற்கு உதவுவதற்காக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேரவை அதன் 46ஆவது அமர்வுகளின்போது அறிக்கையிடப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த பின்னர் இலங்கை மீதான 46/1 தீர்மானத்தை நிறைவேற்றியது. மனித உரிமைகள் பேரவையானது, இலங்கையில் 17 மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களைப் பாதுகாப்பதன் மற்றும் பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவத்தை, பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் நோக்கில் அடையாளம் கண்டு, மனித உரிமைகளுக்கான ஐ.நா, உயர்ஸ்தானிகர் அலுவலகம் தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குதல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக தகுதிவாய்ந்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேரவை அதன் 46 ஆவது அமர்வுகளின்போது அறிக்கையிடப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த பின்னர் இலங்கை மீதான 46/1 தீர்மானத்தை நிறைவேற்றியது.
மனித உரிமைகள் பேரவையானது, 17 இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களைப் பாதுகாப்பதன் மற்றும் பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவத்தை, பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் நோக்கில் அடையாளம் கண்டு , மனித உரிமைகளுக்கான ஐ.நா, உயர் ஸ்தானிகர் அலுவலகம் தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால பொறுப்புக் கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குதல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக தகுதிவாய்ந்த அதிகாரவரம்பில் உள்ள உறுப்பு நாடுகள் உட்பட தொடர்புடைய நீதித்துறை மற்றும் ஏனைய நடவடிக்கைகளை ஆதரித்தல் என்பவை தொடர்பான அலுவலகத்தின் ஆற்றலை வலுப்படுத்த தீர்மானித்ததாகவும் தீர்மானம் கூறுகிறது.