தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் ஆண்டர்சன் 6 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு வழங்கப்பட்டது. இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.
இதுவரை டெஸ்டில் 664, ஒருநாள் போட்டியில் 269 மற்றும் டி20 இல் 18என 367 போட்டிகளில் மொத்தம் 951 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். முன்னதாக, இலங்கையின் முத்தையா முரளிதரன் (1347), அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (1001), இந்தியாவின் அனில் கும்ப்ளே (956) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.