இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் திகதி தொடங்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்ற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை முக்கியமான பல வீரர்களை அணிகள் விடுவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதே நேரம் மும்பய் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச பிரன்சைஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்திருக்கிறார்.
இநந்த ஆண்டுக்கான 14வது ஐ பி எல் போட்டிகள் இந்தியாவில் நடாத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.