இலங்கைக்கு சார்பாக ஜெனீவா 2 ஆவது வரைபு

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை – தொடர்பான தீர்மானத்தின் இரண்டாவது வரைபு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் திருத்தப்பட்ட தீர்மானமானது பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான மற்றும் முன்னெடுப்பதற்கான விடயங்களை சிறிதளவும் கொண்டிருக்காததுடன், தீர்மானத்தின் வார்த்தைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது இலங்கையின் அவலங்களுக்கான அடிப்படைக் காரணங்களை அடையாளம் கண்டுகொள்வதில் ஏற்பட்டுள்ளதோல்வியை வெளிப்படுத்துகிறதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் தீர்மானத்தின் இரண்டாவது வரைபானது இலங்கைக்கு இணக்கமாக காணப்படும் விதத்தில் திருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான தீர்மானத்தில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நிறுவனத்திற்கு மீண்டும் வலுவூட்டுவதற்கு கோருவதற்கு பதிலாக, அதன் திறமையான மற்றும் சுதந்திரமான செயற்பாட்டிற்கான அழைப்பு உள்ளது.

ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியாக கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அதன் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2020 மேயில் பாராளுமன்ற பேரவை, முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜயந்த சாந்தகுமார விக்கிரமரத்னவை காணாமல்போனோர் அலுவலகத்தின் உறுப்பினராக நியமித்தது.

இந்த நடவடிக்கைக்கு சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் (ஐ ரி.ஜே. பி.) நிர்வாகப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் இதை உருவாக்குவது கடினம் – யுத்தத்தின் இறுதியில் பாரிய பலவந்தமான காணாமல் போன சம்பவங்களில் ஈடுபட்டதாக ஐ. நா. சபையின் விசாரணையில் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொறுப்பாளராக இருந்தவர் என்று பெயரிடப்பட்டிருந்தவர் இப்போது காணாமல் போனவர்கள் குறித்து தானே விசாரணை செய்கிறார் என்று அவர் குறிப்பிடப்பட்டிருந்தார்.

தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தல் ?

இதேவேளை சில திருத்தங்கள் தீர்மானத்தை பலவீனப்படுத்துவதாக கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி குறித்து, மீண்டும் நிகழும் நிகழ்வுகள் என்பது தொடர்பான ஷரத்து நீக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக தற்போதைய பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும், அது மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது. இந்த விடயத்தில் சுதந்திரமான, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முயற்சிகளாக இதில் அரச மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் உட்பட ஊழலை விசாரிப்பதற்கும் உத்தரவாத மளிக்கும் இடத்தில், வழக்குத் தொடுப்பதற்கு உதவவும் ஆதரவளிக்கவும் தயாராக உள்ளது. இந்த சரத்து நீக்கப்பட்டதன் மூலம் இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சீர்குலைவு ஒரு அசாதாரணமானது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த நெருக்கடிக்கு முன்னர் இலங்கை 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஏனைய சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் கடன்கள் பெறப்பட்டுள்ளன.

மதரீதியான துன்புறுத்தல் பற்றிய கவலைகளில், விசேடமான உதாரணமாக, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக இஸ்லாமிய வெறுப்புத் தடைகுறித்த . பாகுபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவும், முஸ்லிம்களும் ஏனைய மதக் குழுக்களும் தங்கள் சொந்த மதச் சடங்குகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துமாறு சுருக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதியின் மன்னிப்பு குறித்த குறிப்பிட்ட கவலையும் கைவிடப்பட்டிருக்கிறது – தாமதங்கள் மற்றும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று தீர்மானம் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு முன்னர், இந்த அறிக்கை இப்போது சுயாதீனமான, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான உள்நாட்டு வழிமுறைகளின் தொடர்ச்சியான குறைபாட்டை வலியுறுத்துகிறது.

இராணுவமயமாக்கலைப் பொறுத்தவரை, அரசாங்க செயற்பாடுகளின் தொடர்ச்சியான இராணுவ மயமாக்கல் என்பதைக் குறிப்பிடுவதற்குப்பதிலாக, இராணுவ மயமாக்கலில் இருந்து சிவில் அரசாங்க செயல்பாடுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் என்று மாற்றப்பட்டுள்ளது.

Spread the love