இறுதி வரைபில் இன்று வரை திருத்தங்கள் செய்ய முடியும்- 6 ஆம் திகதி ஐ. நா. பேரவையில் வாக்கெடுப்பு

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் ஒக்ரோபர் 6 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. உறுப்பு நாடுகள் வாக்களிப்பதற்கு முன் கோரிக்கை விடுத்தால் இந்த வரைவு உள்ளடக்கத்தில் மேலும் திருத்தங்கள் சாத்தியமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான குழுவின் இறுதி வரைவுத் தீர்மானம் செப்ரெம் 28 புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு, காலக்கெடுவுக்குஒரு வாரத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. செப்ரெம்பர் 22 வியாழன் அன்று தீர்மானத்தின் இரண்டாவது வரைவை மதிப்பாய்வு செய்வதற்காக முக்கிய குழு மூன்றாவது முறைசார கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த போதிலும் செப்ரெம்பர் 21 இல் இந்த சமாப்பிப்பு இடம்பெற்றிருந்தது. 

மேலும் எழுத்து மூல திருத்தங்களுக்கான காலக்கெடு இன்று 3 ஆம் திகதி மதியம் 1 மணி (ஜெனீவா நேரம்) வரையாகும். ஏதேனும் எழுத்து மூல திருத்தம் இருந்தால் இன்று மாலை 3 மணிக்குள் (ஜெனீவா நேரம்) சமாப்பிக்கலாம். இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒக்ரோபர் 6 வியாழக்கிழமை பிற்பகல் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் பிரதான அறையில் நடைபெற உள்ளது. உறுப்பு நாடுகளின் 47 வாக்கு 2களில் குறைந்தபட்சம் 22 வாக்குகளைப் பெற முடியும் என்று – அவர்கள் நம்புகிறார்கள் என்று முக்கிய குழுவைச் சேர்ந்த வட்டாரமொன்று கூறுகிறது.

கடந்த வருடம் இதற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித் திருந்தன 14 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன. அப்போதைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, வாக்களிக்காததையும் நிராகரிப்பு என எண்ணி, தீர்மானத்தை ஆதரித்த 22 நாடுகளுக்கு எதிராக 25நாடுகள் நிராகரித்திருந்ததாக வெற்றியென உரிமை கோரியிருந்தார் இதற்கு முன்னுதாரணம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸால் ஏற்படுத்தப்பட்டிருந்தது , அவரும் மொத்த வெற்றியை பெறுவதற்கு எதிராக வாக்களிப்பதையும் பிரசன்னமாகி பிராததையும் மொத்த வெற்றியாக சேர்த்திருந்ததும் தெரிந்ததே.

Spread the love