வந்த மசகு எண்ணெயை இறக்க டொலர் இல்லை-20 நாட்களாக காத்திருக்கும் கப்பல்

7 மில்லியன் டொலர்கள் அல்லது சுமார் 2500 மில்லியன் ரூபா பணம் இல்லாததால் 99,000 மெற்றிக்தொன் மசகு எண்ணெய்யுடன் கப்பல் ஒன்று 20 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் நங்கூரமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். கப்பல் நங்கூரமிட்ட ஒரு நாளுக்கு தாமதக் கட்டணமாக ஒன்றரை இலட்சம் டொலர்கள் செலுத்த வேண்டும் என்று கூறிய அதிகாரி, அதன்படி கப்பல் தாமதக் கட்டணமாக 30 இலட்சம் டொலர்கள் அதாவது 110 கோடி ரூபா செலுத்த வேண்டும் என்றார்.

Coral Energy நிறுவனத்திடம் இருந்து ஓடர் செய்யப்பட்ட மசகு எண்ணெய்யுடன் நிற்கும் இந்தக் கப்பல் செப்ரெம்பர் 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்ததாகவும், அதனை விடுவிப்பது தொடர்பில் நிதியமைச்சு மற்றும் திறைசேரியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். மசகு எண்ணெய் தரமற்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மேலும் இதுபோன்ற மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எரிசக்தி துறையில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Spread the love