மாஸாக வெளியான பிக்பாஸ் புகழ் தாமரையின் முதல் பட ஃபஸ்ட் லுக்

பிக்பாஸ் 5வது சீசனில் மக்களுக்கு அறிமுகம் இல்லாத நபராக நுழைந்தவர் தாமரை. கூத்து கட்டி நடித்து அதில் வரும் வருவாய் மூலம் குடும்பம் நடத்திவந்த தாமரை பிக்பாஸ் பிறகு நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வளர்ந்து வருகிறார்.

பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் என தொடர்ந்து இரண்டு நிகழ்ச்சியில் பங்குபெற்ற அவர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வந்தார். தனியாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதன் மூலமும் தற்போது சம்பாதித்து வருகிறார். இந்த நேரத்தில் தான் அவரது முதல் படம் குறித்து ஒரு தகவல் வந்தது. தற்போது அவரது முதல் படத்தின் ஃபஸ்ட் லுக் இப்போது வெளியாக அவரது ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகிறார்கள். மாதவ் ராம் தாஸ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஆழி என்று பெயரிட்டுள்ளனர். இதோ தாமரை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்,

Spread the love