நடிகர் விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அடுத்த படத்தில் விஜய் நடிக்க உள்ளார் .
இந்நிலையில், சென்னை பனையூரில் அமைந்திருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை செயலகத்தில் நிர்வாகிகள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்த நிலையில், நடிகர் விஜய் திடீரென இந்த கூட்டத்துக்கு வருகை தந்துள்ளார் .
விஜய்யின் திடீர் வருகையை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது . விஜய் ரசிகர்கள் இது தொடர்பான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எதற்காக பனையூரில் கூட்டம் நடைபெற்றது? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.