பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் இராஜினாமாவை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தெரிவுக்குழுவினால் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் (கோப்) பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னதாக, கோப் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக முன்னாள் கோப் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத்தை கோப் குழுவின் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.