T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் அடித்த 2 ஆவது துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை ஸ்டாய்னிஸ் படைத்துள்ளார். 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச T-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார். இந்த T-20 நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவும் ஆசிய சம்பியன் இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. இதில் அவுஸ்திரேலியா நாணயச் சுழற்சியில் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது. ஸ்டாய்னிசின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவரிலேயே அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இப்போட்டியில் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச T-20 கிரிக்கெட் வரலாற்றில் அதி வேகமாக அரை சதமடித்த அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
1. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022, 2. டேவிட் வார்னர் 18, பந்துகள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010, 3. கிளன் மேக்ஸ்வெல் : 18 பந்து கள் பாகிஸ்தானுக்கு எதிராக, 2014 அத்துடன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த ஒட்டுமொத்த பட்டியலில் 2 ஆவது துடுப்பாட்ட என்ற சாதனையை படைத்துள்ளார். யுவராஜ் சிங் 12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007 2. மார்கஸ் ஸ்டோனிஸ் : 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக எடுத்தமை குறிப்பிடத்தக்கது.