அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கால்கள் இல்லாமல் பிறந்த இளைஞர் ஒருவர் இரண்டு கின்னஸ் சாதனைகளை முறியடித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த கிளார்க் என்ற இளைஞர் பிறக்கும் போதே இரு கால்களும் இல்லாத நிலையில் பிறந்தவர் ஆவார்.
ஆனாலும் அவர் மன உறுதியுடன் போராடி விளையாட்டில் தீவிர பயிற்சி எடுத்து கடந்த 13 ஆம் திகதி அன்று 2 கின்னஸ் சாதனைகளை முறியடித்து சாதனை படைத்தார். மிக உயரமான பெட்டி ஜம்ப் (Highest Box Jump) மற்றும் புஷ் அப்ஸ் (Diamond Pushups) ஆகிய விளையாட்டுகளில் இந்த சாதனையை கிளார்க் படைத்துள்ளார்.