6 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை – தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்

பதுளை, கேகாலை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி 06 ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. 

குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல் மற்றும் கற்பாறை சரிந்து வீழ்தல் போன்ற அனர்த்தங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

இதனிடையே, மேல், சபரகமுவ, மத்திய, வட மேல், ஊவா மற்றும் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love