இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி அந்நாட்டு அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
04 மாதங்களுக்குப் பின்னர் ரஷ்யாவின் Aeroflot Airlines கடந்த மாதம் 10 ஆம் திகதி இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்ததுடன், ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவையான Azure Air நிறுவனமும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும், ரஷ்யாவின் 04 நகரங்களில் இருந்து 07 Azure Air விமானங்கள் இந்த நாட்டிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.