அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனை நேற்றைய தினம் மாலை சந்தித்து கலந்துரையாடினர்.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து ஒரு மணிநேரம் வரை தவிசாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் சோ.சுகிர்தன், படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகள், பல ஆண்டுகளாகியும் மக்கள் மீள்குடியேற்றப்படாமை, படையினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
இது முதன்மையாக சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வரவு செலவுத் திட்டமென தெரிவிக்கப்படுகிறது. தனியார் துறையின் பங்களிப்புடன் அபிவிருத்திக்காக சுமார் 40 அரச நிறுவனங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சுமார் பத்து நிறுவனங்களை உடனடியாக தனியார்மயமாக்கி அபிவிருத்தி செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.