பொது பரீட்சையொன்றை நடத்தி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை

தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு  டிசம்பர் மாத நடுப்பகுதியில் பொது பரீட்சையொன்றை நடத்தி, அவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையில் உள்வாங்கப்பட்ட நிலையில், பணிகளுக்கு அமர்த்தப்படாத மேலதிக ஊழியர்களை இவ்வாறு ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். 

26,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்கும் நோக்கில் பொது போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பொது அறிவு மற்றும் உளநல பரீட்சைகளின் புள்ளிகள் அடிப்படையில், ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் கூறினார்.

Spread the love