இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம்- ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, குறுகிய காலப்பகுதிக்குள் இரு மடங்காகியுள்ளதாக புதிய அறிக்கையொன்றின் ஊடாக ஐ.நா சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய 3.4 மில்லியன் பேருக்கு தற்போது மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார், சிறு குழந்தைகள் உள்ளிட்ட 2.4 மில்லியன் பேருக்கு உணவினை வழங்குவதற்கும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மீனவ சமூகத்தினருக்கு உதவிகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Spread the love