ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பல்வேறு அம்சங்களில் மேம்படுத்துவது தொடர்பில் இந்த சுமுக சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், நாட்டின் தேசிய சபைக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் செயற்பாடுகள் தொடர்பிலும் தூதுவர் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக விளக்கினார். வர்த்தகத்தில் பெண்களை மேம்படுத்துவது கவனம் செலுத்தி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது. நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் கலந்துரையாடினார்.