ரஷியாவில் முதல் முறையாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி பெரும் பாதிப்பு ஏற்படுத்தியதோடு சுமார் 180-க்கும் மேற்பட்டநாடுகள் கொரோனா அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருகின்றன .
அதே சமயம் இன்னும் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் அடுத்த புதிய பிரச்சினையாக பறவை காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது .

முதன் முறையாக பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவி இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. ரஷியாவின் தெற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் 7 தொழிலாளர்களுக்கு ‘எச்5 என்8’ என்ற புதிய வகை பறவை காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் சுகாதார கண்காணிப்பு குழு தலைவர் அன்னை போபோவா தெரிவிக்கும் போது, ‘‘கோழிப்பண்ணையில் தொழில் புரிந்த 7 தொழிலாளர்களிடம் இருந்துது சேகரிக்கப்பட்ட மரபணுக்களை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது தெரியவந்துள்ளதுடன் அவர்களுக்கு எந்த கடுமையான பாதிப்பும் ஏற்படவில்லை என்பதோடு உலகில் முதன்முறையாக பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியது தொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

‘‘இந்த வைரஸ் மேலும் பிறழ்வடைய முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் மனிதரிடம் இருந்து மனிதனுக்கு பரவும் திறன் இந்த வைரஸ் பெறாதபோது இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதுக்கும் அதனை தடுக்க தயாராவதற்கும், போதுமான மற்றும் சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் நேரத்தை தருகிறது’’ என தெரிவித்தார் .

பறவை காய்ச்சல் வைரஸ்களில் வெவ்வேறு வகைகள் உள்ள நிலயில் தொற்று நோயான ‘எச்5 என்8’ பறவைகளுக்கு ஆபத்தானது. இதற்கு முன்பு இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியதாக அறிவிக்கப்படவில்லை. தற்போது மனிதர்களுக்கு பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar