யாழ் மருத்துவமனை பிரதான மருத்துவர் ஒருவருக்கும் கோவிட்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற PCR பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறப்பான சேவையாற்றி வரும் நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கே கோவிட் -19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தாமே முன்வந்து பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar