மியான்மர் இராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கம்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கடந்த மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது . ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததோடு , புதிய அரசை ஏற்கவும் இராணுவம் மறுப்பு தெரிவித்ததோடு , கடந்த வாரம் ஆங் சாங் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியை இ ராணுவம் கைப்பற்றிக் கொண்டதோடு ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களையும் ராணுவம் வீட்டுச் சிறையில் வைத்தது.

இதைனை அடுத்து , மியன்மரில் இ ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இராணுவம் விதித்துள்ள தடையை மீறி போராட்ட காரர்கள் போராட்டத்தை நடத்துவதால் அதை ஒடுக்க அடக்கு முறையை
இராணுவம் கையாண்டு வருகிறது.போராட்டக்காரர்கள் பலர் போராட்டங்கள் குறித்த புகைப்படங்கள் தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக பக்கங்களில் பகிர்ந்து வருவதால்
அங்கு தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்பட்டது. அத்தோடு காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மியன்மர் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ், பேஸ்புக் வரம்புகளை மீறியதாக கூறி பேஸ்புக் இந்த பக்கத்தை முடக்கியுள்ளது . பலமுறை பேஸ்புக்கின் சமூக வரம்புகளை இந்த இராணுவ பக்கம் மீறியுள்ளதால் தற்போது முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar