மேலதிக கொடுப்பனவுகளை(Bonus) வழங்கியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஆகியவற்றிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை கோரியுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம் என நிதி அமைச்சு அறிவுறுத்தியிருந்ந நிலையில், மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு வௌியிட்ட சுற்றறிக்கைகளை மீறி இந்த நிறுவனங்கள் மேலதிக கொடுப்பனவுகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதிக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 02 மாத சம்பளத்தை அதன் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக வழங்கியுள்ளதுடன், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு இலட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.