இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் நேற்று நடை பெற்ற 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
கோலி 3 ஆயிரம் ஓட்டங்களை எட்டுவதற்கு 72 ஓட்டங்களே பெற வேண்டியிருந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 73 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணி வெற்றி பெற உதவியதுடன் 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மொத்தம் 87 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 3,001 ஓட்டங்களை கடந்து கோலி இந்த சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் மார்டின் குப்தில் 2வது இடத்திலும் 3 வது இடத்தில் இந்திய அணியின் ரோகித் சர்மாவும் உள்ளனர் .