அநீதியான வரிக் கொள்கை மாற்றப்படாவிட்டால், நாளைய சம்பள தினத்தின் பின்னர் கடுமையான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச துறையின் 15 தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.
இந்த தொழிற்சங்கங்கள் கூட்டாக ஏற்கனவே கறுப்பு எதிர்ப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்தியுள்ளன.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம், மருத்துவ பீட விரிவுரையாளர்களின் சம்மேளனம், இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் கூட்டாக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த மாதத்தில் இருந்து ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோரிடம் 6 வீதத்தில் இருந்து 36 வீதம் வரை வரி அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.